நடு வீதியில் பலியான பொலிஸ் அதிகாரி ; கர்ப்பிணி மனைவி, குழந்தைகளுக்கு நேர்ந்த அவலம்
எப்பாவல, பொத்தேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் சர்ஜென்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் அவரது கர்ப்பிணி மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பொலிஸ் கன்ஸ்டபிள் என நால்வர் எப்பாவல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வந்த பொலிஸ் சர்ஜென்ட்டே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
அவர் தனது மனைவி, மகள், மகன் மற்றும் பொலிஸ் கன்ஸ்டபிளுடன் வழக்கம்போல் லொறியில் பயணம் செய்தபோது குறித்த லொறியானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் வந்த பேருந்தின் பக்கவாட்டுக் கண்ணாடியில் மோதியதுடன் அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் மோதி கவிழ்ந்துள்ளது.
இதில் லொறியை செலுத்திய பொலிஸ் சர்ஜென்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.