யாழில் நடுவீதியில் மதுபோதையில் பொதுமகனை தாக்கிய பொலிஸ் அதிகாரி!
யாழ்ப்பாண பகுதியில் மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியொருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்றிரவு (24-08-2024) குறிகட்டுவான் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் அதிகாரி வீதியால் சென்ற நபரை இடைமறித்து அவருடன் முரண்பட்டு, தாக்குதல் முன்னெடுத்துள்ளார்.
இதையடுத்து தாக்குதலுக்குள்ளான பொதுமகன் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனடிப்படையில் தாக்குதல் நடாத்திய ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் குறித்த பொலிஸ் அதிகாரி, ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை இன்றையதினம் (25-08-2024) நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.