யாழில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ; பிரதான சந்தேக நபர் தொடர்பில் வெளியான முக்கிய விபரம்
யாழ்ப்பாணம் - கொடிகாமத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை உழவு இயந்திரத்தால் மோதிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரை, எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதிலும், பிரதான சந்தேக நபர் தலைமறைவாகி தேடப்பட்டு வந்தார்.

அடையாள அணிவகுப்பு
இந்நிலையில், குறித்த சந்தேக நபர் சட்டத்தரணி ஊடாக நேற்று (02) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இதனைத் தொடர்ந்து, அடையாள அணிவகுப்பை நடத்த உத்தரவிட்ட நீதிவான், சந்தேக நபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கடந்த சனிக்கிழமை கொடிகாமம் - கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்ற இடத்திற்கு சென்ற கொடிகாமம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உத்தியோகத்தர்களில் ஒருவர் உழவு இயந்திரத்தால் மோதப்பட்டு உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.