அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!
நாட்டில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2024 ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் 16 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தைச் செலுத்தும் போது வீதி விதிகளை மீறிச் செயற்பட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சாதாரண வீதிகளில் பயணிக்கும் வேகத்துக்கும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வேகத்துக்கும் இடையே பாரியளவு வேறுபாடுகள் உள்ளன.
இதனால் சிறியளவான தவறுகளும் பாரிய விளைவுகளுக்கு வழிவகுக்கும் என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.