வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு சென்று பொலிஸ் ஜீப் வண்டி: அதிகாரிக்கு நேர்ந்த நிலை!
வாழைச்சேனை துறைமுகத்திற்கு முன்னால் கல்குடா பொலிஸ் நிலைய ஜீப் வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (03-11-2023) இடம்பெற்றுள்ளது.
கல்குடா பொலிஸ் நிலையத்திலிருந்து வாழைச்சேனை நோக்கி வேகமாக பயணம் செய்த ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வாழைச்சேனை துறைமுகத்துக்கு முன்னால் உள்ள வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் மதில், ஜீப் வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஆகியவை சேதமடைந்துள்ளன.
இவ் விபத்தில் ஜீப் வண்டியை செலுத்தி வந்த பொலிஸ் அதிகாரி காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.