ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய பொலிஸ் பரிசோதகர் பணிஇடைநீக்கம்
மொனராகலை, வெல்லவாய பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரை தனிப்பட்ட தகராறு காரணமாக, போத்தலால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இதனை மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் தெரிவித்துள்ளது. புத்தல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பணிஇடைநீக்கம்
பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகரின் விடுதிக்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லவாய பொலிஸ் நிலையத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபரான பொலிஸ் பரிசோதகர் கடந்த திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதன் பின்னர் நேற்று (04) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்துள்ள நிலையில் தற்போது பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.