நல்லூர் கந்தசுவாமி கோயிலில் குவிக்கப்பட்ட பொலிஸார் ; காரணம் வெளியானது
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய, ஆலய வளாகத்திலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் சி.சி.ரி.வி கெமராக்கள் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
கண்காணிப்பு பணிகள்
நல்லூர் வருடாந்த மகோற்சவத்தில் இன்று முதல் எதிர்வரும் ஐந்து நாட்கள் விசேட உற்சவங்கள் இடம்பெறவுள்ளன.
அதற்கமைய, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்திரளானவர்கள் உற்சவத்தில் கலந்துகொள்வார்கள்.
உற்சவத்தில் கலந்து கொள்ளும் அடியார்களின் பாதுகாப்பின் நிமித்தம் அதிக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களில் இருந்தும் சிவில் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.