கொலை செய்ய தயாராக இருந்த நால்வருக்கு அதிகாலையில் ட்விஸ்ட் கொடுத்த பொலிஸார்
நபர் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிடுவதற்காக ஒன்றுகூடியிருந்த சந்தேகத்தின் பேரில் நான்கு பேர், மீட்டியாகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (30) அதிகாலை கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள்
கைது செய்யப்பட்ட நால்வரும் மீட்டியாகொட பகுதியில் அமைந்துள்ள, வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுவொன்றின் தலைவரது சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 37 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், ஆறு தோட்டாக்களும் மீட்கப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
யாழில் தனித்திருந்த தாய்க்கு நடந்த சம்பவம் ; வெளிநாட்டிலிருந்த மகனுக்கு சிசிரிவி காட்சியில் காத்திருந்த அதிர்ச்சி
அத்துடன், சந்தேக நபர்களிடமிருந்து 50 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.