யாழ் மாவட்ட செயலகத்தில் பெருமளவான பொலிஸார் குவிப்பு ; காரணம் இதுவா!
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (27) நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் , மாவட்ட செயலக சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனின் இணை தலைமையுடன் , நடைபெற்று வருகிறது.

அதேநேரம் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் ஆசிரியர்களால் மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் , காணி விடுவிப்பு கோரி காணி உரிமையாளர்களும் மாவட்ட செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , மாவட்ட செயலக சுற்று வட்ட பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.