பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை ; பொலிஸாரின் அதிரடியால் பிடிபட்ட இளைஞர்கள்
பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களைக் குறிவைத்து சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்து வந்த இருவரை களுத்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (07) மாலை தொடங்கொடவில் உள்ள துடுகல சந்திப்புப் பகுதியில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

போதைப்பொருள்
வர்த்தக நிலையமொன்றில் கஞ்சா கலந்த போதை மருந்துகள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
வர்த்தக நிலையத்திலிருந்தும், அருகிலுள்ள தற்காலிக வாகன நிறுத்துமிடத்திலிருந்தும் கஞ்சா கலந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள், பெலியத்த மற்றும் செவனகல பகுதிகளைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.