வவுனியாவில் வாகனத்தை வழிமறித்து சோதனை நடத்திய பொலிஸார்! சிக்கிய மர்மங்கள்
வவுனியா - ஈரட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இன்றையதினம் (03-10-2022) ஈரற்பெரியகுளம் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து யாழ்ப்பாணத்திலிருந்து வத்தளைக்கு பயணம் செய்த கூளர்ரக ஹென்டர் வாகனத்தை இன்று (3.10) மாலை 6 மணியளவில் ஈரட்டை பகுதியில் வழிமறித்து பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த வாகனத்திலிருந்து 3800கிலோ மஞ்சள் மற்றும் 250 மில்லிலீற்றர் விவசாய கிருமிநாசினி மருந்து போத்தல் 519 என்பவற்றை சட்டவிரோதமாக கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஈரட்டை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சட்டவிரோதமான பொருட்களை கொண்டு சென்ற நீர்கொழும்பை சேர்ந்த 43 வயது நபரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.