ஹெரோயினுடன் சந்தேக நபரொருவரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!
மிரிஹான பொலிஸ் பிரிவில் 5 கிராம் 470 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிகேரா வீதி பிரதேசத்தில் நுகேகொடை குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தலங்கம பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பதிவு செய்யப்பட்ட சந்தேகநபர் என்பது தெரியவந்துள்ளது.
வீடுகள் பலவற்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேகநபரிடமிருந்த பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளக்காக மிரிஹாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.