நல்லுார் கந்தன் ஆலயத்தில் பொலிஸாரின் அராஜகம்; பக்தர்கள் விசனம்
வரலாற்று சிறப்புமிக்க நல்லுார் கந்தனின் மகோற்சப பெருவிழா கோலாகலமாக இடம்பெற்றுவரும் நிலையில் இன்றைய தினம் தேர்த்திருவிழா நடைபெற்றது.
இந்நிலையில் திருவிழா நாட்களில் எந்தவித சம்பளமோ அல்லது எதிர்பார்ப்போ இல்லாது சேவை மனப்பான்மையுடன் கடமையாற்றிய சாரணத் தொண்டர்களில் ஒருவரை அங்குநின்ற பொலிஸார் அடித்ததாக கூறப்படுகின்றது.
மூதாட்டிக்கு உதவிய சாரணரை தாக்கிய பொலிஸார்
இந்த சம்பவம் இன்று மதியம் 2 மணியளவில் யாழ் மாநகரசபைக்கு முன் உள்ள வாகனத்தடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அடிவாங்கியவுடன் சாரண தொண்டர் கீழே விழுந்து கிடந்ததாக அங்கு நின்ற பக்தர்கள் கூறுகின்றார்கள்.
நடக்க இயலாமல் நின்ற ஒரு வயோதிப மாதுவை நல்லுார் முன் பந்தல் வரை கொண்டு சென்று விட்ட காரணத்தாலேயே பொலிசார் தொண்டன் மீது தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.
தாங்கள் கூறிய இடத்தில் நிற்காது தங்களின் சொல்லுக்கு கட்டுப்படாது செயற்பட்டதாக கூறியே தொண்டன் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் அர்ப்பணிப்புடன் நலூர் ஆலயத்தில் சேவை செய்த சாரண தொண்டரை பொலிசார் அடித்த சம்பவம் கடும் விசனத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.