போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு பொலிஸார் செய்த செயல் ; நீதிமன்றின் அதிரடி உத்தரவு
யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதை கண்டித்து கடந்த 2018 ஆம் ஆண்டு பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது இரு விவசாயிகளை கைது செய்தமையின் ஊடாக பொலிஸார் அவர்களது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதற்கமைய மனுதாரர்களான குறித்த இரு விவசாயிகளுக்கும் அரலகங்வில பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரிக்கு 30 ஆயிரம் ரூபாவை தனது தனிப்பட்ட பணத்தில் இருந்து நட்டயீடாக செலுத்துமாறு உயர்நீதிமன்றம் 7ஆம் திகதி திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

அடிப்படைய உரிமை மீறல்
தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு திங்கட்கிழமை (7) விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ நீதியரசர் எஸ்.துரைராஜா ஆகியோரின் ஏகமனதான தீர்மானத்துடன் நீதியரசர் யசந்த கோடகொட இந்த தீர்ப்பை அறிவித்தார்.
மேலும் பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய சந்தேகநபர்களை விளக்கமறியில் வைக்கும் உத்தரவை நீதவான்கள் பிறபிக்கக்கூடாது என நீதியரசர் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சந்தேக நபர் ஒருவரை தடுப்பு காவலில் வைக்குமாறு பொலிஸார் முன்வைக்கும் கோரிக்கையின் தேவைப்பாடு தொடர்பில் நீதவானுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அத்தியாவசிய தேவை பொலிஸாருக்கு உண்டு என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.