ரணில் வழக்கில் ஆஜரான பிக்குகளை அவமதித்ததாக பொலிஸார் மீது புகார்
ரணிலின் வழக்கில் ஆஜரான பிக்குகளை அவமதித்ததாக பாலித தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் காவல்துறை மீது புகார் அளித்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை நடைபெற்ற கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகைதந்த வணக்கத்திற்குரிய மாலபே சீலரதன தேரர் உள்ளிட்ட பிக்குகளை பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.
மேலும் பிக்குகளுக்கு எதிரான அவதூறு கருத்துக்களையும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதன் காரணமாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோருக்கு எதிராக பாலித தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் அளித்துள்ளனர்.
குறித்த பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையம் எதிர்காலத்தில் மேலும் விசாரணைகளைத் தொடங்க உள்ளது.