ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக பொதுஜன பெரமுன விடுத்துள்ள அறிவிப்பு!
மொட்டு கட்சியின் மக்களாணையில் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe பதவி வகிக்கிறார் எனவும் தமது கொள்கைக்கு முரணாக செயற்பட்டால், அது தொடர்பில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
சாகர காரியவசம் மேலும் தெரிவிக்கையில்,
பெரமுனவின் மக்களாணை தான் தற்போதும் நடைமுறையில் உள்ளது. ஆகவே, கட்சியின் கொள்கையை அடிப்படையாக கொண்டே ஜனாதிபதி செயற்பட வேண்டும்.
பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு முரணாக ஜனாதிபதி செயற்பட்டால், அது தொடர்பில் உரிய தீர்மானத்தை எடுப்போம். கட்சியின் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் ஜனாதிபதி எம்முடன் இணக்கமாக செயற்படுகிறார்.
எந்த காரணிகளுக்காகவும் கட்சிக் கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டோம். ஜனாதிபதி ரணில் எமது கட்சிக் கொள்கைக்கு அமைய, ஜனாதிபதி தேர்தலில் செயற்பட்டால் அவருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
இல்லையெனில், பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.