இலங்கை விஜயத்தில் தமிழரை ஒதுக்கி வைத்த பிரதமர் மோடி; பௌத்தத்திற்கே முன்னுரிமை!
இந்தியபிரதமர் மோடி இலங்கைக்கு வந்து சென்ற நிலையில், அவரது விஜயம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய பிரதமரின் இலங்கைக்கான விஜயத்தின்போது, மோடியின் பாதுகாப்பு மட்டுமல்லாது இலங்கை வான்பரப்பும் இந்திய கட்டுப்பாட்டிலேயே இருந்ததாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றான.
அது மட்டுமல்லாது தமிழ் கட்சி தலைவர்களை இந்திய பிரதமர் சந்தித்த நிலையில், அவர்களிடம் பேசுவதற்கு மிக சொற்பநேரமே வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
நரேந்திரமோடியின் இலங்கைக்கான விஜயத்தின் போது பௌத்த புனித இடங்களுக்கு மட்டுமே விஜயம் செய்ததுடன், தமிழர்களின் இடங்களுக்கு அவர் செல்லவில்லை என்பதுடன், இலங்கை அரசங்கத்துடன் மோடி செய்துகொண்ட ஒப்பந்தங்கள் தொடர்பிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுத்துள்ளது.