அனுராதபுரத்திற்கு விஜயம் செய்த பிரதமர் மஹிந்தவுக்கு கடும் எதிர்ப்பு!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, (Mahinda Rajapaksa) தனது இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
நாளைய தினம் (09-05-2022) முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுவார் உள்ளிட்ட செய்திகள் கடந்த சில நாட்களாக பரவின.
அதுமட்டுமன்றி நாடாளுமன்றத்தில் கடந்த 5 அல்லது 6 ஆம் திகதியன்று உரையாற்றுவார் என்றும் தகவல்கள் கசிந்திருந்தனர்.
இருப்பினும், பிரதமர் உரையாற்றவில்லை. இதனிடையே பதவி விலகுமாறு ஜனாதிபதி தனக்கு அறிவுறுத்தவில்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக அனுராபுரத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (08-05-20202) சென்றிருந்தார்.
பிரதமரின் வருகைக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த, அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.