கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் தினேஷ் குணவர்தன!
கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்துக்குள் உள்ள வியாபார நிலையத்தை இன்றையதினம் பிரதமர் தினேஷ் குணவர்தன திறந்து வைத்துள்ளார்.
இதன்போது, மூன்று இளம் வியாபார முதலீட்டாளர்களுக்கு வியாபாரத் சான்றிதழ்கள் வழங்கி வைத்துள்ளார்.
பின்னர் கிளிநொச்சியின் விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியிருந்தார்.
விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி, விவசாயம், போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதோடு வட மாகாணத்திற்கான பல திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அபிவிருத்தி குழு கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். ஏ. சுமந்திரன், அங்கையன் இராமநாதன், சிவஞானம் ஸ்ரீதரன், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் முரளிதரன், கிளிநொச்சி மாவட்டத்தின் இராணுவ உயர் அதிகாரிகள் விமானப்படை உயரதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஏனைய அரச திணைக்களத்தின் மாகாண மட்ட உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.