அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் வழங்கிய உறுதி
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான அனைத்து ஆதரவும் வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த பேரழிவால் இடம்பெயர்ந்த அனைவருக்கும், வீடுகள், வணிகங்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கும், தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப, அரசாங்கம் என்ற வகையில், சாத்தியமான சகல ஆதரவையும் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கடினமான நேரம்
பெரும் பேரழிவை எதிர்கொண்டபோதிலும், கடின உழைப்பு, செயல்திறன், மனிதநேயம் மற்றும் கருணை மிக்க ஒரு நாடாக நமது பலம் என்ன என்பதை நம் நாட்டு மக்கள் முழு உலகுக்கும் எடுத்துரைத்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாட்டுக்கு இது ஒரு கடினமான நேரம் என்பதை குறிப்பிட்டுள்ள பிரதமர், ஒரு சவாலான பயணம் உள்ளதாகவும், அதைச் சிரமங்களுக்கு மத்தியிலேயே கடக்க வேண்டி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரதடை, தண்ணீர் மற்றும் உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட எண்ணற்ற தடைகளை எதிர்கொண்ட போதிலும், மக்களின் பொறுமையும், வலிமையுமே நமது ஒட்டுமொத்தத் தேசத்தின் பலம் என தாம் உறுதியாக நம்புவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.