தமிழர் பகுதியில் வறுமையின் பிடியில் வாழும் குடும்பத்தின் அவலம்(Video)
போர் முடிந்து ஒரு தசாப்தம் முடிந்த போதும் தமிழர் வாழ்வில் இன்னும் விடிவு பிறக்கவில்லை. போரின் வடுக்கள் மாறாத நிலையில் தொடர்ந்து வந்த கொரோனா தொற்று மக்களை முடக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்த நிலையில், தொடர்ந்து வந்த நாட்டின் நெருக்கடியானது மக்களை படுகிழியில் தள்ளியுள்ளது.
தமிழர்கள் என்பதனால் அரசில் உதவிகள் பல கிடைக்கப்பெறாத நிலையிலும் , மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் நாடாளுமன்றம் சென்றவர்கள் மக்களை மறந்த நிலையிலும் இன்றைய தமிழர்கள் வாழ்வானது காப்பான் இல்லாத மந்தை கூட்டமாக அலைகழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
போர் சூழலில் ஆயிரக்கணக்கான பிள்ளைகளை மண்மீட்புக்காய் மனமுவந்து அளித்த பெற்றோர்கள் ஏராளம். இந்நிலையில் மண்மீட்பு போரில் பிள்ளைகளை இழந்த பெற்றோர்களின் இன்றைய அவலநிலை கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது. அவர்களின் அவலநிலையினை இந்த உறவுப்பாலம் நிகழ்ச்சி உங்களுக்கு எடுத்து வந்துள்ளது.