ஆலயம் வரும் பக்தர்ககளால் குவிந்த பிளாஸ்டிக் குப்பைகள் ; மரைகளுக்கு பெரும் அச்சுறுத்தல்
அம்பாறை - தொன்மை வாய்ந்த உகந்தை முருகன் கோயில் வளாகத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளால் அங்கு வசிக்கும் மரைகள் பெரும் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்து வருகின்றன.
கோவில் வளாகம் சுற்றிலும் அதிக எண்ணிக்கையிலான மரைகள் காணப்படுகின்றன. இவை பசுமை சூழலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாது, புற்கள் மேய்தல் மற்றும் தண்ணீர் தேவைக்காகவும் ஆலயத்திற்கு வரும் மரைகளின் முக்கிய ஆதாரமாகவும் விளங்குகின்றன.
பிளாஸ்டிக் குப்பைகளை உண்ணும் மரைகள்
இந்நிலையில், பக்தர்களின் தான்தோன்றித்தனமான செயல்களால் ஆலய வளாகத்தில் பிளாஸ்டிக் மற்றும் பிற குப்பை கூழங்கள் அதிகளவில் குவிந்துள்ளன.
இந்தக் குப்பைகள் முறையாக அகற்றப்படாமை, அங்கு வரும் மரைகள் அவற்றை உண்பதற்கும், அதன் காரணமாக உயிரிழப்புக்கும் வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சூழலியல் பாதுகாப்பிற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கோவில் வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.