பிளாஸ்மாவை பயன்படுத்தி கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கக் கூடாது
கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் இரத்தத்தில் இருந்து பெறப்படும் பிளாஸ்மாவை பயன்படுத்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த சிகிச்சையின் மூலம் கொரோனா தோற்றாளர்களுக்கு சிறந்த பெறுபேறுகள் வெளிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு அவர்களிடமிருந்து பெறப்படும் அயனிமத்தில் அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தி காணப்படுகிறது. எவ்வாறாயினும் தற்போது இந்த முறைமையில் உயிர் பாதுகாப்பு அதிகரிக்கவில்லையென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அதனை செயற்படுத்துவதற்கான செலவு மற்றும் நேரம் அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய தீவிர கொரோனா நோய் நிலைமை இல்லாதவர்களுக்கு இரத்த அயனிமத்தை பயன்படுத்துவதற்கு எதிராக இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.