வானத்தில் பறக்கும் போதே தீ பிடித்த விமானம்
FedEx நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் தனது பயணத்தை தொடங்கியதாகவும், சிறிது நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த விமானத்தின் விமானிகள், விமானத்தை மீண்டும் அதே விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
சம்பவத்தின் போது விமானத்தில் மூன்று பேர் இருந்த நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் புறப்படும் போது பறவைகள் என்ஜினில் மோதியதால் தீ விபத்து ஏற்பட்டமை தெரியவந்துள்ளது.