திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன் வந்தால் ....மீண்டும் பியுமி ஹன்சமாலியின் சர்ச்சை!
திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தன்னிடம் வந்தால், தனது சரும நிறத்திற்கு ஏற்ப அவர்களை மாற்றித் தருவேன் என இலங்கை நடிகை பியுமி ஹன்சமாலி கூறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்க்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடிகை பியுமி ஹன்சமாலி கடந்த காலத்தில் தனது மகன் தொடர்பான ஒரு பிரச்சினையினால் நீதிமன்றங்களுக்கு ஏறி இறங்கி இருந்தார்.

புதிய வர்த்தக முயற்சி
பியுமி ஹன்சமாலி மீது தொடுக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான (Cream Case) சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தார். சமீபத்தில், சண்டிமால் ஜயசிங்கவின் பிரம்மாண்ட பிறந்தநாள் விழாவின்போது, அவர் தனது புதிய வர்த்தக முயற்சி குறித்துப் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்:
இந் நிலையில் “ஒரு கருமையான நிறம் கொண்டவர் வெள்ளையாக மாறும்போது ஏற்படும் அந்த உணர்வு எனக்குத் தெரியும். அந்த உணர்வு யாருக்குத்தான் இருக்காது என்று நான் நினைக்கிறேன்? எனது வரவேற்பறை (Salon) பெண்களுக்கானது மட்டுமே. பலர் சருமத்தை வெள்ளையாக்க விரும்புகிறார்கள். அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் எனது வரவேற்பறையில் வழங்குகிறேன்.
திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே என்னிடம் வந்தால், எனது சரும நிறத்திற்கு ஏற்ப அவர்களை மாற்றித் தருவேன். புதிதாக அறிமுகப்படுத்தவிருக்கும் எனது பிரைடல் பேக் (Bridal Pack) மூலம் சருமத்தை வெள்ளையாக்க முடியும்.
இதற்குத் தேவையான பயிற்சிகளைப் பெறுவதற்காகவே நான் வெளிநாடு சென்றிருந்தேன்.” கொழும்பு 7-இல் நான்கு மாடிகளைக் கொண்ட ஒரு பெரிய கட்டிடத்தை இதற்காக அமைத்து வருகிறேன்.
தற்போது இறுதி வேலைகள் நடைபெற்று வருகின்றன என்றும் பியுமி ஹன்சமாலி கூறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.