ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய பிள்ளையான்; உதய கம்மன்பில கடும் பிரயத்தனம்!
சிவனேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த உள்ளதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன், விடுதலை புலிகள் அமைப்பு நடத்திச்சென்ற சித்திரவதை முகாம்களை பிள்ளையான் கணக்கில் சேர்ப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நாட்களின் பின் வெளிவந்த பிள்ளையான்
அத்துடன், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்னையானை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஓராண்டாக தடுத்து வைக்கப்பட்டிருந்த, கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் நேற்று (2) நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
கல்கிசை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட பிள்ளையானை சட்டமா அதிபரின் பரிந்துரைகள் வரும் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஓராண்டு காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான், இந்தக் காலகட்டத்தில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை எனதுடன், தற்போது பிள்லையான் ஆளே தெரியாதளவு அடையாளம் மாறிப்போயுள்ளார்..