அலி கமேனி உயிரிழந்த புகைப்படம் போலியானது ; உறுதியான தகவல் வெளியானது
ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கடந்த சனிக்கிழமை கமேனி உயிரிழந்தார்.இதனை ஈரானிய அரச ஊடகம், டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட பலரும் உறுதிப்படுதியிருந்தனர்.
அதன் பின்னர், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் சடலம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில் மீட்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது போன்ற புகைப்படம் இணையத்தளங்களில் வெகுவாக பரவி வருகின்றது.

செயற்கை நுண்ணறிவு
இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட தருணம் என்று கூறி அந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இது உண்மையான புகைப்படம் அல்ல, அது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என்பதை கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தப் புகைப்படத்தின் இரண்டு வெவ்வேறு பதிப்புகளை பகுப்பாய்வு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட பரிசோதனைக் கருவி தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட புகைப்படம் செயற்கை நுண்ணறிவு கருவியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதை தெளிவாக உறுதிப்படுத்த முடியும் என குறிப்பிடப்ட்டுள்ளது.