மாணவர்களை வைத்து இளம் மருந்தக உரிமையாளர் செய்த செயல் ; சோதனையில் அம்பலமான விடயம்
கல்நேவ பகுதியில் சுமார் 27 கிலோ கிராமுக்கும் அதிகளவான கஞ்சா கலந்த மதனமோதகத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் கல்நேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்நேவ நகரில் நேற்று (21) மாலை கல்நேவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை ஒன்றின் போதே மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
கைது நடவடிக்கையின் போது சந்தேகநபரிடமிருந்து 27 கிலோ கிராம் 250 கிராம் கஞ்சா கலந்த மதனமோதகம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர் செவனகல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மருந்தகம் ஒன்றினை நடத்தி வந்தவர் எனவும், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கல்நேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.