ஃபைசர் - ஆஸ்டராஜெனெகா தடுப்பூசிகள் தொடர்பில் பிரித்தானிய ஆய்வறிக்கை வெளியிட்ட தகவல்
கொரோனா வைரஸ் தொற்று எதிராக பைசர் மற்றும் ஆஸ்டராஜெனெகா தடுப்பூசிகளின் பாதுகாப்பு திறன் ஆறு மாதங்களுக்குள் குறைந்துவிடுவதாக பிரித்தானிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் (Booster) எனும் மூன்றாவது தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தைக் கண்டுபிடிப்புகள் வலியுறுத்துகின்றன.
பிரிட்டனின் ZOE நிறுவனத்தினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ZOE லிமிடெட் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ஆய்வு நிறுவனம், லண்டன் கிங்ஸ் கல்லூரியுடன் இணைந்து இலாப நோக்கற்ற முயற்சியாக கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக பிரித்தானியாவின் சமூக பாதுகாப்புத் துறையால் நிதியளிக்கப்படுகிறது.
1.2 மில்லியனுக்கும் அதிகமான பரிசோதனை முடிவுகள் ஆய்வில் பயன்படுத்தப்பட்டன. ஃபைசர் தடுப்பூசியின் ஆற்றல் 5 முதல் 6 மாதங்களில் 88 வீதத்திலிருந்து 74 வீதத்திற்கு குறைந்திருந்தது.
அஸ்ட்ராஜெனேகா தடுப்புமருந்தின் ஆற்றல் 4 முதல் 5 மாதங்களில், 77 வீதத்திலிருந்து 67 வீதத்திற்கு குறைந்தது.
முன்னதாக, குறைந்தது 6 மாதங்களுக்கு வைரஸிற்கு எதிரான தடுப்பாற்றல் நீடிக்கும் என்று கூறப்பட்டது.