தப்பியோடிய கோட்டாபயவால் ரயில் முன் பாய்ந்த நபர்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அவரை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாக பரவிய செய்தியை கேட்டு நபரொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வத்தளை, ஹுனுபிட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த 25 ஆம் திகதி கிரிபத்கொட, மாயா மாவத்தையைச் சேர்ந்த 80 வயதான வி. பி. ஆரியதாச என்பவரே, இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
குறித்த நபர் கொழும்பிலிருந்து மீரிகம நோக்கிச் சென்ற ரயில் முன் பாய்ந்து இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மரண விசாரணையில்உயிரிழந்தவரின் மகள் சாட்சியமளிக்கையில்,
கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியதால் , எனது தந்தை கவலையுடன் இருந்தார், இந்நிலையில் அவரை கைது செய்வதற்கு பிடிவிராந்து பிறப்பிக்கப்படலாம் என செய்தியும் வெளியானதையடுத்து அவர் பித்து பிடித்தது போல் இருந்ததாகவும், அவரது தற்கொலையில் எமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.