யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி சம்பவம்... நித்திரைக்குச் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழப்பு!
யாழில் நித்திரைக்குச் சென்ற நபர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் 45 வயதுடைய செபமாலை செல்வராசா என்ற நபரே நேற்றையதினம் (04-04-2024) உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் கடந்த 31ஆம் திகதி இரவு உறங்குவதற்கு சென்ற நிலையில் மறுநாள் காலை 7 மணி ஆன போதிலும் அவர் நித்திரையில் இருந்து எழுந்திருக்கவில்லை.
இதையடுத்து அவரை பரிசோதித்துப் பார்த்த உறவினர்கள் மயக்கமுற்ற நிலையில் அவர் இருப்பதை கண்டறிந்து உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்றுக் காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம் குமார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.