யாழ். வைத்தியசாலையில் பெயர் தெரியாத நபர் சிகிச்சையில் ; பொலிஸார் விசாரணையில்
யாழ்ப்பாணத்தில் இரு கைகளிலும் தீவிரமான வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த நபர் 119 அவசர சேவைக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அவர் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 24ஆம் இலக்க சத்திர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை குறித்த நபரின் பெயர் மற்றும் அடையாளம் தொடர்பான எந்தவொரு தகவலும் வைத்தியசாலையின் பதிவுகளில் இல்லை.
பெயர் மற்றும் அடையாளம் உறுதி செய்யப்படாததனால், அவரது கைகளில் ஏற்பட்டுள்ள வெட்டுக் காயங்களுக்கு காரணம் மற்றும் இது தற்கொலை முயற்சியா அல்லது வேறு யாருடைய தாக்குதலா என்பதையும் பொலிஸார் உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.