யாழில் எரிபொருள் நிலையத்தில் தீ குளிக்க முயற்சித்த நபரால் பரபரப்பு!
யாழில் நபர் ஒருவர் மனைவியுடன் சண்டை பிடித்துக் கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற கோப்பாய் பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த 38 வயதான குடும்பஸ்த்தர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியுடன் முரண்பட்டுக் கொண்டு கைதடியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இதன்போது மதுபோதையில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து விரைந்து சென்ற பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.