ஜனாதிபதி அநுர தொடர்பில் பொய்யான தகவலை வெளியிட்ட நபர்... கொழும்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி குறித்து இணையத்தில் பொய்யான செய்தியை பரப்பிய சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஏற்பட்ட நோய் நிலைமை குறித்து இணையத்தில் பொய்யான செய்தியை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் இன்று (06-11-2024) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
சட்டத்தரணி சுனில் வட்டகல செய்த முறைப்பாட்டின் படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்தது.
சுபாஷ் என்ற நபரின் கணக்கின் ஊடாக இந்த போலியான தகவல் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுனில் வட்டகல தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.