பாதசாரி கடவையில் மோட்டார் சைக்கிள் மோதி நபர் உயிரிழப்பு
களுத்துறையில் பாடசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை சிறிகுருச பகுதியில் நேற்று (22) மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு அருகில் உள்ள பாதசாரி கடவையில் வீதியை கடந்தவர் மீது காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர்
தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த அய்யப்புலி யேசுதாசன் என்ற 54 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முன்னாள் கடற்படை சிப்பாய் மற்றும் அவரது 17 வயது மகளும் காயமடைந்து களுத்துறை நாகொடை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சடலம் நாகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.