திருமணம், DJ நிகழ்ச்சிகளில் இசையை ஒலிபரப்ப அனுமதிப்பத்திரம் ; வெளியான முக்கிய தகவல்
திருமணங்கள், தனியார் விருந்துகள் மற்றும் DJ நிகழ்ச்சிகளுக்கான இசை உரிமம் பெறும் நடைமுறையைத் இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம் (ACPOSL), தனது உறுப்பினர்களின் மேலதிக முடிவுகள் வரும் வரை, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமணங்கள் மற்றும் பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட தனியார் நிகழ்வுகளுக்கான உரிம நடைமுறையைத் தொடர்வதா என்பது குறித்த இறுதி முடிவு, எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று ACPOSL தெரிவித்துள்ளது.

இசை உரிமம்
DJ நிகழ்ச்சிகளுக்கான இசை உரிமம் இடைநிறுத்தம் இதற்கிடையில், உரிம நடைமுறையில் ஏதேனும் நிரந்தரமான மாற்றத்தைச் செய்வதற்கு அதன் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதல் தேவைப்படும் என்றும், ஏனெனில் அதன் நிர்வாகக் குழுவால் இத்தகைய முடிவைச் சுயமாக எடுக்க முடியாது என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், நிகழ்வுகளில் இசை நிகழ்ச்சிகளை வழங்கும் DJக்களுக்கான உரிமத் தேவையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ACPOSL மேலும் தெரிவித்துள்ளது.
மயக்கமான கர்ப்பிணி பெண்ணை உயிரோடு எரித்த கும்பல் ; 11 மணி நேர சிசிடிவி காட்சிகளால் அம்பலமான பகீர் சம்பவம்
இசைக்கான உரிம நடைமுறையானது நிகழ்விடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வணிக ரீதியாக இசை பயன்படுத்தப்படும் போது மட்டுமே பொருந்தும் என்றும், வீடுகளில் நடைபெறும் தனியார் நிகழ்வுகளுக்கு இது பொருந்தாது என்றும் அந்த சங்கம் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.