வலிவடக்கில் 7 ஆலயங்களுக்கு செல்ல அனுமதி
யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 21 ஆலயங்களில் 7 ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்ய இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனை இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக்க குமார தெரிவித்துள்ளார். அதற்கமைய பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளிட்ட 7 ஆலயங்களில் பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியும் என தெவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் கோரிக்கை
அதேசமயம் குறித்த ஆலயங்களில் வழிபாடு நடத்த விரும்புவோர் தமது சுய விபரங்களை ஆலய நிர்வாகத்தினூடாக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் கையளிக்குமாறும் இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் உயர் பாதுகாப்பு வலயத்திற்கு செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.