இலங்கையில் இந்திய ரூபாய்: அனுமதிப்பது தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் இந்திய தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் பரிமாற்றத்திற்கு இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமிங்க (Ranil Wickremesinghe) 2 நாட்கள் பயணமாக டெல்லி வந்தார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.
இந்த பயணத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும், இந்த பயணம் தொடர்பாக கொழும்பில் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கூறியதாவது,
இலங்கையில், அமெரிக்க டொலர், சீனாவின் யென், யூரோ ஆகியவற்றை பயன்படுத்தப்படுவது போல், இந்திய ரூபாயையும் உள்ளூர் பரிமாற்றத்திற்கு பயன்படுத்த அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பல நாட்டு கரன்சிகளை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் குறையும்.
எனினும், திருகோணமலையை தொழில், எரிசக்தி மற்றும் இரு தரப்பு ஒத்துழைப்புக்கான மையமாக மாற்றுவதற்கான இந்தியா இலங்கை இடையிலான ஒப்பந்தத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மேலும், இலங்கை அணி சேரா நாடு. கூட்டுக்குழு மூலம் சாத்தியமான திட்டங்களை கண்டறியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மட்டுமே கையெழுத்து போட்டுள்ளோம்.
இத்தகைய வெளிப்பாடையான ஒப்பந்தத்திற்கு எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.