கொழும்பில் இரவுப் பொழுது உல்லாசத்தை அதிகரிக்க அனுமதி
இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு நகரில் அனுபவிக்கக்கூடிய உல்லாச அனுபவங்களை அதிகரிப்பதற்கும் கட்டமைப்பு ரீதியான அணுகலுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு கடலோர வீதியை அபிவிருத்தி
அதற்கமைய, 'கடலோர இராப் பொழுது உறங்காத கொழும்பு' என்ற தொனிப்பொருளின் கீழ் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து தெஹிவல வரையான 7.4 கிலோமீற்றர் தூரம் கொண்ட கொழும்பு கடலோர வீதியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதில் காலிமுகத்திடல் தொடக்கம் புனித தோமஸ் ஆரம்ப பாடசாலை வரைக்கும் 400 மீற்றர் தூரமான வலயத்தில் அதிக கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிக்கப்படுகின்றது.