இலங்கை அரசாங்கம் 13 வருடங்களாக செய்யத் தவறியதை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் செய்துள்ளது!
இலங்கை அரசாங்கம் 13வருடங்களாக சாதிக்காததை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் சாதித்துள்ளதாக படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்தவிக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.
ஹேக்கின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நேற்று இலங்கை அரசாங்கம் எனது தந்தையின் படுகொலையில் குற்றவாளி என்பதை கண்டறிந்துள்ளது என தனது டுவிட்டர் பதிவில் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.
எனது தந்தையின் கொலைக்கு நீதியை வழங்கியுள்ளது
மேலும், இலங்கை அரசாங்கம் 13 வருடங்களாக செய்யதவறியதை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் செய்துள்ளதாகவும், எனது தந்தையின் கொலைக்கு நீதியை வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Yesterday, the People’s Tribunal at The Hague found the government of Sri Lanka guilty of my father Lasantha Wickrematunge’s murder. The People’s tribunal has achieved justice for my father which the government of Sri Lanka failed to do in 13 years. https://t.co/raYcCO0vc3
— Ahimsa Wickrematunge (@awickrematunge) September 20, 2022
இந்நிலையில் மக்கள், தீர்ப்பாயத்திற்கும் பீரிபிரஸ் பத்திரிகையாளகளை பாதுகாப்பதற்கான குழு எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் ஆகியவற்றிற்கு அவர்களின் கடுமையான பணி இந்த திட்டத்திற்கு உயிர்கொடுப்பதற்கான அவர்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காக எங்கள் குடும்பத்தின் நன்றியை தெரிவிப்பதாகவும் அகிம்சா விக்கிரமதுங்க கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.