தமிழர் பகுதியில் பெண் கொலையில் சிக்கிய 20 வயது இளைஞன்
பெரியநீலாவணை பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்பாறை குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் பெரியநீலாவணை 01ஆம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
கொலைக்கு உதவிய இளைஞன்
கடந்த 30 ஆம் திகதி நடந்த கொலை தொடர்பாக அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் நேற்று (07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் சந்தேகநபருக்குச் சொந்தமான வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை குற்றத் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.