முல்லைத்தீவில் வெய்யிலில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ,சிவநகர் பகுதியில் வீதி ஓரமாக வைத்து எரிவாயு விநியோகத்தர்களால் இன்று மக்களுக்கான எரிவாயு வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அது தொடர்பில் மக்களுக்கு எதுவித அறிவித்தல்களும் வழங்காத நிலையில் இவ்வாறு வழங்கப்பட்ட போதும் 11.00 மணியுடன் நிறுத்திவிட்டார்கள் என பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை அங்கு 400 எரிவாயு சிலிண்டர்கள் மக்களுக்கு வழங்கியுள்ளதாக விநியோகத்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மக்கள் வெய்யிலில் நீண்ட வரிசையில் நின்றபோதும் எரியாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் திரும்பிசென்றுள்ளார்கள்.
காட்டில் விறகு வெட்ட முடியாத நிலையில் பகலில் மின்சாரம் தடைப்பட்பட்டுள்ள நிலையில் எரிவாயுவினை பயன்படுத்தி சமையல் நடவடிக்கைக்கு பழக்கப்பட்டுள்ளதாக வர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் எரிவாயு,எரிபொருளுக்கு எந்த தட்டுப்பாடும் நிலவாது என அரசாங்கம் அறிவித்தாலும் தாம் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.