அச்சத்திற்கு மத்தியில் படகுப்பாதையூடாக பயணிக்கும் மக்கள்!
யாழ்ப.காரைநகரில் இருந்து ஊர்காவற்றுறைக்கு படகுப்பாதையின் ஊடாக பயணிக்கும் மக்கள் அச்சத்தின் மத்தியிலேயே பயணித்தை முன்னெடுத்து வருகின்றதாக விசனம் தெரீவித்துள்ளனர்.
சுமார் 600 மீற்றர் நீளம் கொண்ட குறித்த படகுப் பாதை பயணம் மிகவும் அச்சுறுத்தல் மிக்கதாக இருப்பதாக அதில் பயணம் செய்வோர் கூறுகின்றனர். தண்ணீரில் நடந்தே படகுப் பாதையில் ஏறவேண்டியுள்ளது.
மேலும் இந்த படகுப் பாதையில் அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், நீதிமன்றுக்கு வரும் மக்கள் என பலரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கு நிதி ஒதுக்குவதாக கடந்த அரசாங்கமும் (2015), தற்போதைய அரசாங்கமும் (2021) கூறப்பட்டது.

இருப்பினும், கேபிள் மூலமாக இயக்கப்படும் இந்த படகுப் பாதையை மாற்ற எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த ஆண்டு (2020) ஊர்காவற்றுறை – காரைநகர் இடையில் 500 மீற்றர் நீளமான பாலம் அமைப்பதற்கு சுமார் 1,700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.