கிளிநொச்சியில் வீதிக்கு இறங்கிய மக்கள்!
கிளிநொச்சியில் ‘பெண்கள் மத்தியஸ்தம் குழுவினரால்‘ கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று(10) இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டமானது கிளிநொச்சி பிள்ளையார் கோவிலடியில் இருந்து பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு டிப்போ சந்தி வரை சென்றடைந்தது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தப்பட வேண்டும் எனவும், ஆடைத் தொழிற்சாலைகளை மூடுவதை நிறுத்தி அவர்களுக்கு தொடர்ச்சியாக பணிகளை வழங்க வேண்டும் எனவும்,ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படவேண்டும்எனவும், இளவயது திருமணம் இடைநிறுத்தப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தி இருந்னர்.
போராட்டத்தில் பெண்கள் மத்தியஸ்தம் அமைப்பின் நிறைவேற்று பனிப்பானர் பத்தினி வீரசிங்க மற்றும் கிளிநொச்சி பெண்கள் அமைப்பின் இனைப்பாளர் கஜனி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.