வவுனியா குடிவரவு திணைக்களத்தில் அல்லும் பகலும் கால்கடுக்க நிற்கும் மக்கள்; தீர்வு கிடைப்பது எப்போது?
வவுனியா குடிவரவு, குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் மக்கள் கடவுச்சீட்டுகளை பெற நீண்ட வரிசைகளில் காத்திரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 25-20 நபர்களுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுக்காக , சுமார் 700 தொடக்கம் 1000 பேர் வரையில் இரவு பகலாக வரிசைகளில் நிற்கின்றனர்.
அல்லும் பகலும் கால்கடுக்க நிற்கும் மக்கள்
வயோதிபர்கள் தொடக்கம் கர்பிணி தாய்மார்கள், சிறுகுழந்தைகளுடனான பெற்றோர்கள் என பலர் கடவுச்சீட்டுக்காக காத்திருக்கின்றனர்.
அரசாங்கம் அண்மையில் கடவுச்சீட்டுக்களை பெறுவதில் உள்ள தாமதங்கள் நீக்கப்படும் என அறிவித்திருந்த போதிலும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில் வவுனியா குடிவரவு, குடியகல்வு திணைக்கள காரியாலய பகுதியின் அசுத்தமான பகுதிகளில் மக்கள் வரிசையில் நிற்கின்றார்கள்.
அப்பகுதியில் உள்ள கால்வாயில் கழிவு நீர் ஓடாமல் தேங்கிநிற்பதுடன் துர்நாற்றம் வீசி வருகின்றபோதும், தொடர்பில் வவுனியா நகர சபையோ குடிவரவு குடியகல்வு திணக்களமோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே கடவுச்சீட்டுக்களை மக்கள் இலகுவாக பெற ஆவன செய்யவேண்டுமென அங்குள்ள மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.