ராஜபக்க்ஷர்களை பாதுகாத்ததால் ரணிலை தூக்கி எறிந்த மக்கள்!
நடந்து முடிந்த 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க படுதோல்வி அடைந்துள்ளார்.
அரசியல் சாணக்கியம், மேற்குலக நாடுகளுடன் நெருக்கமான உறவு, பொருளாதார நிபுணத்துவம் போன்ற பன்முக ஆற்றல்களை கொண்ட ரணில் விக்ரமசிங்க, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளராக அரசியல் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
ராஜபக்சர்களை காப்பாற்றியமைக்கு தண்டனை
இதுவரை மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க மற்றுமொரு தடவை தோல்வி அடைந்துள்ளார்.
கடந்த கோட்டபாய அரசாங்கத்தினை மக்களால் விரட்டியடிக்கப்பட்ட போதும், ஜனாதிபதி பதவி மூலம் அவர்களை பாதுகாத்தமையே மக்கள் அவரை தோற்றடித்தமைக்கான பிரதான காரணமாகும்.
ராஜபக்சர்களை காப்பாற்றியமைக்கு எதிராகவே தாம் தேசிய மக்கள் சக்தி வாக்களித்ததாக தென்னிலங்கை மக்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியல் ஆளுமையுள்ள ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சர்களை காப்பாற்றி, தொடர்ந்தும் ஆட்சியில் செயற்பட வைத்தமை மக்களை கடும் அதிருப்பதி அடைய செய்திருந்தது.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள், ஊழல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை தன்வசம் வைத்திருந்தமை ரணிலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செயற்பாடே தேசிய மக்கள் சக்தி கட்சியும் மக்கள் மத்தியில் எழுச்சி பெற பிரதான காரணமாக அமைந்திருந்தது. இவ்வாறான ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தலில், ரணிலுக்கு நாட்டு மக்கள் தண்டனை கொடுத்து பதவியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய சுமார் 20 வீதமான வாக்குகளை மட்டுமே ரணில் விக்ரமசிங்க பெற்றுள்ளார். இதனையடுத்து தனது தோல்வியை ஏற்றுக்கொள்வதாக பகிரங்கமாக ரணில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.