யாழில் சட்டவிரோதக் கடற்றொழிலில் ஈடுபட்டவர்களுக்கு நேர்ந்த கதி
யாழ் - வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (07.03.2024) இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத கடல் நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக வெற்றிலைக்கேணி கடற்படை வடமராட்சி கடற்பகுதியில் விசேட உலவு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில் நேற்று(07.03.2024) ஆழியவளை கடற்பகுதியில் ஒளிபாய்ச்சி மூலம் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அதே பகுதியை சேர்ந்த இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் அவர்களது உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தாளையடி நீரியல்வளத்திணைக்கள உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.