மக்கள் வெளியிட்ட ஆதங்கம்!
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மஸ்கெலியா நகரில் மக்களுக்கும் நகரை அன்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள மக்களுக்கும் இந்திய அரசின் மூலம் வழங்கப்பட்ட நன்கொடை பொருட்கள் இன்று வரை கிடைக்கவில்லை என ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த உலர் உணவு பொதிகள் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
இது குறித்து பிரதேச சபையின் தலைவர் மற்றும் நிர்வாக செயளாலர் அம்பகமுவ பிரதேச செயலகம், பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் மக்களுக்கு வழங்கிய நிவாரணம் பொருட்கள் ஏன் மஸ்கெலியா நகரில் உள்ள அனைத்து மக்களும் வழங்க நடவடிக்கை எடுக்க வில்லை என கோரிக்கை விடுக்கின்றனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நேரடியாக தலையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.