இலங்கையை மீட்க துடிக்கும் பொதுமக்கள் ; சில அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் விசனம்
இலங்கை முழுவதும் தித்வா புயலால் நாடு முழுவதும் சின்னாபின்னமாகியிருக்கிறது. பெருமளவிலான உதவிகள் வெளிநாடுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் வந்து குவிகின்றன .
உள்ளூர் அமைப்புகள் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் உதவிப் பொருட்களை சேகரித்து பாதிப்படைந்த இடங்களை நோக்கி செல்கின்றனர். அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் தீவிர அக்கறையுடன் செயல்படுகின்றனர்.தனிப்பட்டவர்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்கின்றனர்.

அலட்சியப் போக்கு
நாட்டில் பெருமளவிலான இளைஞர்கள் மிகுந்த கண்ணியத்துடன் மக்களுக்கான உதவியை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செய்கின்றனர். ஆனால் இன்னமும் மாறாத பல அரச அதிகாரிகளின் நடைமுறை எரிச்சலையும் கோபத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
குவிந்துள்ள உதவிப் பொருட்கள் சில இடங்களில் மண்டிப்போய் கிடப்பதாகவும் அரச அதிகாரிகளின் அலட்சியப் போக்கு தொடர்வதாகவும் அறிய முடிகிறது.
அரசு செயல் திறன் மிக்கதாக இயங்குகிறது ஆனால் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற சில அதிகாரிகளின் செயலாக்கம் கவலை தருவதாக உள்ளது.
கிராம சேவையாளர் முதல் உயர் அதிகாரிகள் வரை அலட்சியப் போக்கு தொடர்கிறது. இவர்களே அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகின்றனர்.
நேர்மைத் திறன் மிக்க அரச அலுவலர்கள் பலர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து செயலாற்றுகின்றுவதுடன் முப்படையினர் தயக்கமின்றி களத்தில் உள்ளனர் அத்தியாவசிய துறைகள் சார்ந்தவர்கள் குறிப்பாக மின்சாரம்,சுகாதாரம் ,நீர் வழங்கல் துறைகள் ஊழியர்கள் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவை பாராட்டத்தக்கது.