மகனின் இறுதி கிரியையில் கலந்துகொண்டவர்கள் மீது சாரமரி துப்பாக்கிச்சூடு! 13 பேர் பலி
காங்கோ நாட்டில் மகன் இறுதி சடங்கில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது திடீரென ஆவேசம் அடைந்த தந்தை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. கடற்படை வீரரான இவரது மகன் திடீரென இறந்து விட்ட நிலையில் அவருக்கு இறுதி கிரியை நடந்தது.
இதில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென ஆவேசம் அடைந்த முகுவா தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன் இறுதி சடங்கில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உயிருக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 9 குழந்தைகள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முகுவா ஏன் இந்த செயலில் ஈடுபட்டார் என தெரியவராத நிலையில் பொலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.